உன் மூச்சுக் காற்றின்
முதல் ஸ்பரிசமது
நம் முதல் காதலதின்
துவக்கமாய்
சிறு ஸ்பரிசமும் ஒரு
சிரிப்பும்
பின்னொரு தழுவலும்
பின் என்னைத் தள்ளி
நெருங்கி ஒரு முறை அணைத்து
இருளில் ஒரு ஓளிதந்து
பின் ஒருமுறை
ஸ்பரிசக் காற்று தருகையில்
எனக்கொரு ஏக்கம்
ஏனிந்த காதல்
படைக்கப்பட்டதென.
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment