
நீ யாரெனக் கேட்கிறாய்
எதைச் சொல்ல
மயங்கிய நிமிடமதை
தயங்கிய பொழுதுகளதை
உன் நினைவில் நிறைந்ததை
சட்டென இவ்வுலகம் மறைந்ததை.
ஊணும் உடையும் உணர்வும் மறந்து
உறங்கிப் போய் உன் நினைவில்
உளறியதை.
வேறொருத்தி கண்டு
நீயெனக் கருதி
கன்னத்தில் இட்டுக் கொண்டதை
பின் முதலாய்
வெட்கப்பட்டதை..
அதன் பின் உணர்ந்த
என் ஆழுமைத் திருடியை
தோட்டத்துப் பூ கேட்டுக்
கோபம் கொள்ள
நான் உன்னிடம் சொல்கிறேன்...
நீ என் மூச்சென்றும்
உன் நினைவு வாசம்
என் சுவாசமென்றும்

0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment