Pages

உன்னிடம் ஒரே ஒரு கேள்வி தமிழச்சி

நியண்டர்தாலின் வழி தோன்றிய நீ
இன்று ஏன் உடை அணிகிறாய்

உடை இன்றி உணவின்றி உன்
முன்னோர் போல திரிந்தாலென்ன

நீ ஒரு குழிகொண்டு பேச
எனக்கொன்றும் குறியில்லை

எந்த மதமும் ஒரு விலங்கிடவில்லையெனில்
உனக்கெதற்கு உடை விலங்கு

உன் தந்தை உன்னை ஆக்கிரமிக்கவில்லையெனில்
நீ உன் உள்வீட்டில் உடை இன்றித் திரி
உன் சமூகமும்
உன்னை அங்ஙனம் நோக்கினால்
வீட்டிலென்ன தெருவில் கூட
நீ நியாண்டர்தாலாய்
திரியலாம்.

நீ ஒன்றும் ஆக்கிரமிக்கப்படவில்லை
உன் தந்தையொரு மதம் சார்ந்தவருமில்லை
அதுதானே நின் ஆண் உறவுகளுக்கும்.
என்றால்
திரிந்து காட்டு ஒரு
நியாண்டர்தாலாய்.

உனைக் கண்ட ஒவ்வொரு ஆணும்
கண்ணால் உனைக் கற்பழிப்பது
இல்லையெனில் நீ என்ன கண்ணகியா
இல்லை ?
உன் சார்ந்த ஆண்களென்ன கோவலர்களா..

பார்வைக்குத்தான்
பர்தா என்பதில்லை
உன் சமூகம் சார்ந்த காமக் கண்களுக்கதான்
அது இசுலாமும் இந்துத்துவமும்
இல்லை கிருத்துவமும்
அவரவர் கொண்டது

எந்த மாதமெனினும் ஒரு ஒழுக்கம்
அதுதானே வாழ்வியல்

உன் மாத நேரத்தில்
நீ உறவு கொள்வாயெனில்
உனக்குள்ளது குழியல்ல
அது போலதான்
என் குறியும்
நீ சொன்ன மாதமும்.

நியண்டர்தாலகி
உன் சமூகம் கண்டு.

கற்பழிப்பு தாண்டிய உன்
ஆண்வர்க்கம் தாண்டி .

உணர்ச்சியற்ற உன் குழி மூடி
விடை சொல் என்னிடம்

நீயும் நின் சார்ந்த
சமூகமும்
எப்படி
உடை கண்டு , நடை கொண்டு
நடப்பீர்களென

உன்னிடம் ஒரே ஒரு கேள்வி தமிழச்சி -
நியண்டர்தாலின் வழி தோன்றிய நீ
இன்று ஏன் உடை அணிகிறாய்

இக்கவிதை கீழ்க்கண்ட கேள்விக்குறியிட்ட ஒரு மனிதப் போர்வையிலுள்ள மகா மட்டமான ஆனதிக்கமற உலகில் அம்மணமாய் அலைந்து திரியும் ஒரு நவீன மனித நேயம் பேசும் தேவச்சியின் பதிலுக்காய் எழுதப்பட்டது

[சிறுகுறிப்பு: பிரான்ஸ் நாட்டில் பர்தா அணிவது தடை செய்யப்பட்ட சட்டமாக அறிவிக்கப்பட்டதை முன்வைத்து தற்போது தமிழக இலக்கியத்தில் சில விவாதங்கள் நடைபெறுகின்றன. தோழர் குமரேசன் அசாக் ‘பெண்ணே நீ’ பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையை முன்வைத்து திருமதி. ஜெஸிலா பர்தாவுக்கு ஆதரவாக ஓர் கவிதையை பதிலாக கூறியிருந்தார். அக்கவிதைக்கு எதிர்விணையாக இக் கேள்வி எழுப்பப்படுகிறது]

நன்றி : திருமதி. ஜெஸிலா




0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...