Pages

சிறுத்தை: சினிமா விமர்சனம் | சிறுத்தை தமிழ் சினிமா விமர்சனம் |

தமிழ் சினிமா சிறுத்தையின் விமர்சனம்



முதன் முறையாக கார்த்திக் இரட்டை வேடத்தில் நடிக்கும் கரம் மசாலா நிறைந்த தெலுங்கில் ஹிட்டடித்த "விக்ரமார்குடுவின்" ரீமேக்கே இந்த சிறுத்தை.

ராக்கெட் ராஜா சென்னையில்  சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்பவன் ,அவனுக்கு உதவியாக சந்தானம் ,கார்த்திக் அண்ட் சந்தானம் அன் கோ வின் பிராதான பொழுது போக்கே திருடுவதும் ,ஊரை ஏமாற்றுவதும் ,தெரு பெண்களிடம் கட்டி புரண்டு சண்டை போடுவதும் தான் .

ஒரு திருமணத்தில் தமனாவை பார்த்து காதல் கொள்கிறான் .ஒருநாள் ஒரு சின்ன குழந்தை இவனை அப்பா என்று அழைத்து இவனுடன் ஒட்டிகொள்கிறாள் ,ராக்கெட் ராஜா திரும்ப ,திரும்ப அந்த குழந்தையிடம் நான் உன் அப்பா இல்லை என்று சொன்னாலும் நீதான் என் அப்பா என்று அந்த குழந்தை அடம் பிடிக்கிறது,ராஜாவுக்கு எல்லாம் குழப்பமாக உள்ளது .பிறகுதான் அவனுக்கு தெரிய வருகிறது இவனை போலவே உருவ ஒற்றுமை உள்ள ரத்தினவேல் பாண்டியனின் குழந்தை தான் அது என்று .

"மரணம் என்னை நோக்கி வரும் பொழுது அதை சிரிப்போடும் ,மீசையை என் கை தடவிய படியும் வரவேற்ப்பேன்" என்று கம்பீரமான் போலீஸ் அதிகாரியாக கண் முன் வாழ்ந்து காட்டுகிறார்- இரத்தின வேல் பாண்டியன்.

இரட்டை வேடமாக இருந்தாலும் அனாவசியமாக நடிப்பில் வேறுபடுகிறார் கார்த்தி .

ரத்தினவேல் பாண்டியன் வடக்கில் உள்ள ஊருக்கு மற்றபடுகிறார் ,தன் குழந்தையுடன் இரயில் இருந்து இறங்கியதுமே அங்கே ரயில்வே ஸ்டேஷன்லில் அராஜகம் செய்யும் ரவுடிகளை பெண்டெடுத்து அங்குள்ள மக்களுக்கு நம்பிக்கை நட்சித்ரமாகிறார்.

அந்த ஊரில் உள்ள வில்லன் மகன் இன்ஸ்பெக்டரின் மனைவியை கடத்தி கொண்டு போய் இரண்டு நாள் வைத்து கற்பழிக்கிறான் ,இந்த விஷயம்  கேள்விப்பட்ட ரத்தினவேல் சூடோடு சூடாக வில்லனின் வீட்டுக்குள்  புகுந்து அவர்களை அடித்து இன்ஸ்பெக்டரின் மனைவியை காப்பாற்றுகிறார் .இதனால் கோபம் கொள்ளும் வில்லன்,ரத்தினவேல் பாண்டியனை கொல்ல ஊருக்கு ஓதுக்கு புறமாக தனி ராஜ்யம் நடத்தும் வில்லனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறான் ,அவனும் மறைந்திருந்து ரத்தினவேல் கொலை செய்து புதைக்கிறான்.

வில்லன் சென்றவுடன் ரத்தினவேல் உயிரோடு இருப்பதாய் உணரும் மக்கள் அவனை காப்பாற்றுகிறார்கள் ,ஆனாலும் அவன் நாட்கள் என்னபடுவதாய் டாக்டர் சொல்ல தன் குழந்தையை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று தேடும் போது தன்னை போலவே உள்ள ராக்கெட் ராஜாவை பார்க்கிறான் அவன்  தான்  சரியான ஆள் என்று எண்ணி அவனிடம் குழந்தையை ராஜாவுக்கே தெரியாமல்   சேர்க்கிறான்,அதற்குள் ரத்தினவேல் உயிரோட இருப்ப தாக வில்லனுக்கு தெரியவர ரதினவேலை தேடி ஆட்களை அனுப்புகிறான் ,அவர்கள் ராஜாவை ரத்தினவேல் பாண்டியன் என நினைத்து கொல்ல துரத்த ,ரத்தினவேல் ராக்கெட் ராஜாவை காப்பாற்றி விட்டு தன் கதையை சொல்லி குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ள சொல்லிவிட்டு இறந்து விடுகிறான் .

ரத்தினவேல் பாண்டியனின் ஆதரவாளர்களுடன் ராக்கெட் ராஜா ரத்தினவேல் பாண்டியனாக வடக்கே செல்கிறான்.

ராக்கெட் ராஜா வில்லனை வென்றான இல்லையா ?  திரையில்

முதல் பாதி முழுவதும் நகைசுவை ,

உதரணமாக கார்த்திக் ஊர் பெண்களுக்கு மொட்டை போட்டால் அதிர்ஷ்டம் கொட்டும் என்பதும் அதை நம்பி அந்த பெண்களும் மொட்டை போடா ஒத்துக்குகொள்ளவதும் பிறகு அந்த பெண்களிடம்  உங்களுக்கு  கிடைப்பதில் எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்று கேட்பதும் ரூ 500 தருகிறேன் என்று ஒரு பெண் சொல்ல உனக்கு அவ்வளவும்  எனக்கு வெறும் ரூ 500 தானா நான் உனக்கு மொட்டை அடிக்க மாட்டேன் என்று பாதியில் நிறுத்தி விடுவதும் ,பின்னாடியே வரும் சந்தானம் பாதி மொட்டைக்கு மொட்டை அடிக்கறது என கூவி கொண்டு வருவது நகை சுவையின் உட்சம் .

இரண்டாம் பாதி விறு விறுப்பு. Thanks for www.tamilmaxs.com


More cinema news @ http://www.tamilmaxs.com

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...