Pages

`டின்களில்' அடைக்கப்பட்ட உணவுகள்: History of Canned Foods |

Canning or Canned Foods is a method of preserving food in which the food is processed and sealed in an airtight container, providing a typical shelf life ranging from 1 year to 5 years and under specific circumstances a freeze dried canned product can last as long as 30 years and can still be safely consumed.

The process was first developed as a French military discovery by Nicolas Appert in 1810. The packaging prevents microorganisms from entering and proliferating inside.


இன்று பெரிய சூப்பர் மார்க்கெட்களில் `டின்களில்' அடைக்கப்பட்ட உணவுகள் Canned Food கிடைக்கின்றன. இவற்றின் தாயகம் எது தெரியுமா? இத்தாலி நாட்டுப் போர்க்களம்தான். 1796-ல் பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் தன் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்த 3 லட்சத்து 50 ஆயிரம் போர் வீரர்களை இத்தாலிக்கு அனுப்பினார். அந்த வீரர்கள் எதிரி நாட்டு வீரர்களுடன் மட்டுமல்ல, பசியுடனும் போராட வேண்டியிருந்தது.

படை வீரர்கள் நன்கு சாப்பிட்டு நலமாக இருந்தால்தான் போரில் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்தார் நெப்போலியன். அதனால் பிரான்சுக்குத் திரும்பியதும், `பயணத்தின்போது உணவைக் கெட்டுப்போகாமல் வைத்திருக்கும் வழிமுறையைக் Methodology கண்டுபிடிப்பவருக்குப் பெரிய பரிசு வழங்கப்படும்' என்று அறிவித்தார்.    நிக்கோலஸ் அப்பெர்ட் என்ற மளிகைக்கடைக்காரர் ஏற்கனவே அதுபற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார். காற்றுப்படாத உணவுகள் கெட்டுப் போகாமல் அதிக காலம் இருக்கும் என்று அவர் கண்டுபிடித்தார். காற்று எளிதில் புக முடியாத கண்ணாடிப் பாத்திரங்களை நிக்கோலஸ் வடிவமைத்தார். அதனுள் உணவை அடைத்து Canned Food வைத்துப் பரிசோதனை செய்தார். மாதக் கணக்கில் உணவு கெட்டுப் போகாமல் இருந்தது. நெப்போலியனின் பரிசும் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்தக் கண்ணாடிப் பாத்திரங்கள் அதிகக் கனமுள்ளதாகவும், செலவு பிடிப்பதாகவும் இருந்தன.

பிரையன் டான்கின் என்ற பிரிட்டீஷ்காரர் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அவர், கண்ணாடிப் பாத்திரங்களுக்குப் பதிலாக தகர டின்னை பயன்படுத்தினார் Canned Food . மெல்லிய தகரத்தைச் சுருட்டி, இரு முனைகளையும் ஒட்டினார் Canned Food. மேல்- கீழ் பக்கங்களில் மெல்லிய தகடுகளால் மூடினார். 1812-ல் காய்கறிகள், சமைத்த உணவுகளை டின்களில் Canned Food அடைத்து விற்கத் தொடங்கினார்.


டின் உணவுகள் வருவதற்கு முன், உயிருள்ள கால்நடைகளையே கப்பலில் ஏற்றிச் செல்வார்கள். அவை சமைக்கப்படும் வரை உணவு கொடுத்து வளர்ப்பார்கள். டின்கள் வந்த பிறகு அந்தத் தொல்லை நீங்கிவிட்டது.

Read More about G.P.S in our other Post in Tamil.

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...