Pages

பால் பொங்கல் | பால் பொங்கல் Recipe |

பால் கொண்டு பொங்கல் தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - 1 கப்
பயித்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 21/2 கப் (பொடியாக சீவியது)
நெய் - 8 டேபிள் ஸ்பூன்
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பால் - 3 கப்
தண்ணீர் - 2 கப்
முந்திரி, திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* அடி கனமான வாணலியை மெல்லிய தீயில் சூடு செய்து சீரக சம்பா அரிசி, பயித்தம்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் சேர்த்து வாசனை வர சற்று வறுத்து களைந்து வைத்துக் கொள்ளவும்.

* பொங்கல் பானையில் 3 கப் பாலையும், 1 கப் தண்ணீரையும் சேர்த்துக் கலந்து ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு பொங்கி வருகையில் வறுத்து களைந்த அரிசி, பருப்பு ஆகியவற்றைப் போட்டு குழைவாக வேக விடவும்.

* பொடியாக நறுக்கிய வெல்லத்தை 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு தூசு நீங்க வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

* வடிகட்டிய வெல்ல நீரை, வெந்த பொங்கலுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

* ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரிப் பருப்பு, திராட்சை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

* பிறகு வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் சேர்க்கவும்.

* இப்போது பச்சைக் கற்பூரத்தை கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் நடுவே வைத்து நெறித்து பொங்கலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...