உன் நியாபகம் |
எழுத மறந்த இத்தனை நாட்களிலும்
ஏங்கித் துடித்த இதயமின்று
ஒரு நொடி நின்று துடிக்கையில்
நிரம்பிய உன் நியாபகம்.
அழகாகும் ஆசையில் அப்பிய முக ஒப்பனை
உன் கண்ணாடி உதட்டு சாயத்தில்!
தொலைந்த மின்சாரத்தில் மிதந்த உன் வாசனை!
சிதறிய மழைதுளி உரசிச் செல்ல
உன் மழைக்கால ஸ்பரிச நடை
என் மனக்காலம் நிறைக்கிறது.!
தொலைந்த இத்தனை நாட்களும்
நிறைந்த கண்ணீருடனும்
இழந்த அழைப்புக்களுடனும்!
விரைவில் இப்பிரிதலின் உச்சம்
கொதிக்கும் இம்மன வலிப் பிரிவின் முடிவில்
இந் நொடிக் கண்ணீருடன் அடங்கட்டும்.
விரைவில் உனைச் சந்திக்க விரும்பும் ?
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment