Pages

நாத்தம் கேட்ட நாத்தனார் | Pain of Ummu

மாமியார்களையும் மற்றும்
இன்ன பிற கருங்காலிகளையும்
படைத்த இறைவனைக் குறை சொல்லவா?
இல்லை அவர்கள் செய்யும்
அவச் செயல் கண்டு அழுது செல்லவா?
சமூக முகமுடியில் சார்ந்தே
தின்னும் இந்தக் கருங் காளிகளுக்கென?
ஒரு சமுதாயம் உள்ளதை
என்னென்று சொல்ல
மலத்தை தின்று நாலு கால்களுடன்
வாழ்வது இதைவிட நன்று.
பணமும் பகட்டும்
மிக்சியும் மெசினும்
பத்தரைக் களஞ்சி
நகையும் கேட்டு வாங்க
நீ நினைப்பது
முதுகெலும்பில்ல நம் கணவர்களுக்கும்
அதட்டி ஒடுக்க நினைக்கும்
நாறிப் போன நாத்தம் கேட்ட நாத்தனார்களுக்கும்
அழுது துடிக்கும் என் போன்ற அண்ணன்களுக்கும்
என் அன்னை அப்படி ஒரு மாமியாரெனில்
நானும் அப்படி ஒரு கணவனெனில்
எம் அனைவருக்கும் ஒரு
விலைமதிப்பற்ற பாடமாய் அமையட்டும்
ஒரு துளிக் கண்ணீரின் விலை
என் உதிரப் பிரவின் கதறல்
ஒரு முறையாவது
உனக்குக் கேட்கட்டும் ?
இறைவா

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...