Pages

சிறு வலிதான்




உன் நினைவில் விழித்த
இன்றைய காலை
உன்னுடனே இருந்துவிட்ட
முன்னிரவு உறக்கம்

உன் ஒற்றைத் துளி
நினைவில் நனைந்து போன
என்னிதயம்

உயிர் சுட்டுச் சென்ற உன்
மூச்சுக் காற்றின் உஷ்ணம்

என் விழி வழி நிரம்பி
ததும்பும் உன் நினைவே
என் தினத் தொடக்கத்தின்
ஆதாரம்..

என்ன சொல்ல
உன்னுடனே
இப்படி கனவிலிருப்பது
ஒரு சிறு வலிதான் என்னவளே

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...