உடைந்து நின்ற ஒரு தருணம்
மொழியும் விழியும் உறைந்து நிற்க
இரவும் நிசப்தமும் என்னை உலுக்க
என் உள்ளக் கதறல்
உனக்கெப்படி கேட்கும்
உனக்காய் செய்த முதல் தியாகமாய்
என் அரும்பு மீசை.
மனிதனாய் நான் செலுத்தும்
கடைசிச் சாலை வாகனம்
என் உடல் வெளி
மறைத்து நான் தரித்த ஆடை
உன் நினைவும் உன்னுடனான
பேச்சுமே என மாறிப் போன என்னுலகம்
மாதவுக்கும் பிதாவுக்குமிடையில்
உனைவைத்த ஒரு மகிழ்ச்சித் தருணம்
கேள்வி ஆயுதமேந்தி நீ தொடுக்கும்
ஒவ்வொரு கணைக்கு மென்
இதயம் நின்று துடிக்க
நீ நிதானமாய்த்தானிருக்கிறாய்.
நிதமும் உன் நினைவுத் தேடலும்
என் கனவு சிறகுகளும்
எல்லை இன்றிப் பறந்து விரிய
மற்றுமொரு தருணம்
என்னுடையதே இல்லையெனினும்
உனக்ககாவும் உன்
அருகாமைக்காகவும்
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment