ஒற்றை விசில்
வழக்கமான ஒற்றை விசில்
கேட்டு நான் துயில் எழ
உன் பாச சத்தமும்
முத்தம் கலந்த
தேநீரும் இல்லை
குழித்து முடிந்து விரைந்து நிற்க
கதகதப்பினூடான
பூந்துவலை துவட்டலும்
அருகாமை வாசமும்
உடைதறிக்கையில்
நின் இடைதளுவலும்
காலை உணவின்பின்
மீந்து சென்ற ஒற்றை
பொங்கல் மிச்சதின் - கடைசிப்
பருக்கை தொட்டுத்துடைத்து
திங்க நீயில்லை
வாசல் வரை வந்து நீ
விடை தர நான் இடை தொட
ம் என்ற சத்தமும்
ம் ம் என்று
நீ தரும் முத்தமும்
இழந்து இங்கு உன் நினைவில்
உடைந்து நிற்க
வாழ்த்துச் சொல்லி
நீ அனுப்பிய குறுஞ் செய்தி
வந்ததை அலைபேசி
சொல்லிட
வழக்கம் போலத் தான்
மற்றொரு ஒற்றை விசில்
உன் நினைவில்
குறிச் சொற்கள்
அலைபேசி,
ஒற்றை விசில்,
பருக்கை,
பொங்கல்
3 வாசகர் கருத்துக்கள்:
நல்லாருக்கு... வாழ்த்துக்கள்...
கவிதை எழிமை கருத்து முத்தம்
நன்றி தோழர்களே
Post a Comment