Pages

வெள்ளைப்படுதல்: காரணம்,மற்றும் வெள்ளைப்படுதலின் தீர்வு

வெள்ளைப்படுதல் / வெள்ளைப்பாடு / வெட்டை:

வெள்ளைப்படுதல் என்பது என்ன ? :

வெள்ளைப்படுதல் என்பது பதினைந்து முதல் நாற்பத்தைந்து வரை வயதுடைய மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு வரும் ஒரு வித நோய் ஆகும்.
வெள்ளைப்படுதல் என்பது சில பேச்சு வழக்கின் படி வெள்ளைப்பாடு அல்லது வெட்டை என்றும் கூறப்படுகிறது.

வெள்ளைப்படுதல் எவ்வாறு ஏற்படுகிறது ? :

பொதுவாகவே பெண்களுக்கு பிறப்புருப்பில் சுரக்கும் திரவம்,வெள்ளையாய் வெளியாவது ஏனெனில் அதிகமான உடல் சூடு, பட்டினி கிடத்தல்,அடிக்கடி உடலுறவு கொள்ளுதல்,காரம்,உப்பு மற்றும் புளிப்பு நிறைந்த பொருட்கள் அதிகமாக உண்ணுதல், சுய இன்பம் மேற்கொள்ளுதல் ஊளை சதை மற்றும் ரத்த சோகை காரணமாக வரும் உடல் சூடு ஆகிய காரணத்தாலும் வெள்ளைப்படுதல் ஏற்படும்.

வெள்ளைப்படுதலின் அறிகுறிகள் :

சிறுநீர் கழிக்கும் முன்போ அல்லது பின்போ வெண்ணிறத்தில் வெளியாகும் மற்றும் இந்த நேரத்தில் கடுப்பு அல்லது எரிச்சலும் பிறப்புறுப்பில் உண்டாகும்.
இடுப்பு,கை,கணுக்கால் மற்றும் மூட்டு வலி ஆகியவையும் ஏற்படலாம்.
உடல் மெலிந்து போவதும் வயிற்றை இழுத்து பிடிப்பது போன்ற உணர்வும் வெள்ளைப்படுதல் காரணமாக ஏற்ப்படும்.

இதயம் படபடப்பு மற்றும் மூச்சு வாங்குதல் ஆகியவையும் ஏற்ப்படும்.

வெள்ளைப்படுதல் முற்றி விட்டால் சீழ் போன்ற கட்டியான திரவம் வரும் இது வெள்ளைப்படுதல் முற்றி விட்டதன் அடையாளமாகும்,

இப்படி ஏற்படுவது கர்ப்பப் பை புற்று நோய் ஏற்ப்பட வழிவகுக்கும், அதனால் கர்ப்பப்பையை எடுக்கும் நிலை கூட ஏற்படலாம்.

வெள்ளைப்படுதல் தடுக்கும் முறைகள் :

சுகாதாரமான உள்ளாடைகளும் சரியான உணவுப் பழக்க வழக்கங்களும் இந்த நோயான வெள்ளைப்படுதலில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

அரிசி வடித்த நீரில் சிறிது சீரகம் இட்டு வைத்து, பின் 1-3 மணி நேரம் கழித்து அந்த நீரை வடிகட்டி அடியில் தங்கிய வெள்ளை நீரை குடித்து வர உடல் சூடு தணிந்து வெள்ளைப்படுதல் குணமாகும்

அன்னாசிப்பழம் தினமும் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.

மாதுளையின் விதை வெள்ளை வெள்ளைப்படுதல் குணமாக்கும்.
புளியங்கொட்டையின் மேல் தோலை காய வைத்து தூளாக்கி, 250 & 300 மில்லி கிராம் அளவு தேன் அல்லது சர்க்கரையில் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை உட்கொண்டுவர ஆகியவை வெள்ளைப்படுதல் குணமாகும்.

இளநீரை முந்தைய இரவே சீவி, அதனுள் சப்ஜா விதை வைத்து காலையில் குடித்து வந்தாலும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

இளம் தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி, காலை, மாலை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தாலும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வாழைப்பூவை சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வர வெள்ளைப்படுதல் குணப்படும்.

ரோஸ் சிரப் அல்லது ரோஜாப்ப் பூ பாகுவை இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு பசும்பாலில் கலந்து சாப்பிடுதலும் வெள்ளைப்படுதலை குணமாக்கும்.


முடிவாக வெள்ளைப்படுதல் என்பது ஒரு பயத்திற்குரிய நோய் இல்லை, சிறந்த உணவுப் பழக்க வழக்கங்கள், மற்றும் முறையான வாழ்க்கை இந்த வெள்ளைப்படுதல் என்ற நோயிலிருந்து நம்மை காக்கும்.

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...