கடலாய் நான்
தீவின் ஒருதுளித் தீர்த்தமாய் நீ .
புதைந்து கிடக்கும் உன்
புன்னகையின் ஓரத்தில்
வழிகிறது என்னுயிர் .
மகரம் கண்டு விரிந்த
உன் மலரிதழ்க்கிடையில்
பூசிய தேனாய் உன் சிரிப்பு
சிரிப்பின் முடிவிலிருந்த
கன்னக் குழியின் கடைசியில்
ஜொலிக்கும் வைரமாய் உன் பற்கள்
புன்னகை வழிந்தோட உனைக் கண்ட
அந்நொடி - இப்போதும்
உள்ளம் உறைய
உதடு நொறுங்க
உயிர் பெருத்து
உன் சந்நிதியில் நான் சரிய
முழுதாய் ஒரு சிரிப்பை
விட்டுச் செல்
என் ஆடும் உயிர்
நிலைக்கவும்
நின் பெயர் சொல்லி என் இதயம்
துடிக்கவும்.
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment