கோவையின் பெரும்புகழ் பெற்ற கல்லூரி அது. ரெக்கார்டு நோட்டில் கையெழுத்து வாங்க ஆசிரியர்கள் அறைக்குச் சென்றிருக்கிறார் கீர்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது!). சம்பந்தப்பட்ட ஆசிரியரைத் தவிர, வேறு யாரும் அங்கு இல்லை. தள்ளியிருந்த நாற்காலியை அருகில் இழுத்துப் போட்டு உட்காரச் சொன்னவர், 'ஃபீல் ஃப்ரீ. நாமெல்லாம் ஃப்ரெண்ட்ஸ்தான். என்ன பெர்ஃப்யூம் போட்டிருக்க... ஆளையே தூக்குதே!' என்று ஆரம்பித்து, கடைசியில் டாப்ஸ் சைஸ் வரை கேட்டபடியே கன்னத்தைத் தட்டியிருக்கிறார். பிராக்டிக்கல் நோட்டைக் கிழித்து அவர் முகத்தில் எறிந்துவிட்டு வெளியே வந்த கீர்த்தி, மறுநாள் ஒரு பட்டாளத்துடன் கல்லூரி முதல்வரை முற்றுகையிட, விவகாரம் ஆசிரியரின் தற்காலிகப் பணி நீக்கத்துடன் முடிவுக்கு வந்திருக்கிறது. கீர்த்தியின் அப்பா, ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளருக்கு நெருக்கமான புள்ளி என்பதால்தான் இது சாத்தியமாயிற்று.
வகுப்பில் ஒருவர் பாலியல்ரீதியாக உங்களை அணுகுகிறார் என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்!
மற்ற மாணவர்களைக் காட்டிலும் உங்களை விசேஷமாக நடத்துவது.
உங்களுடன் தனியாகப் பொழுதைக் கழிக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்வது.
எதிர்பாராமல் நிகழ்ந்ததுபோல உங்கள் உடல் பாகங்களைத் தொடுவது அல்லது உங்களின் உடல் மேல் உரசுவது.
உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இடையே பாலியல் நடவடிக்கைகள் இருக்கிறது என்று குற்றம் சாட்டி, அது குறித்துக் கேள்வி கேட்பது.
உங்களின் உடலைப்பற்றியோ, உடைகளைப்பற்றியோ சிலாகித்து வர்ணிப்பது.
நீ சிறப்பானவள், வித்தியாசமானவள், மற்றவர்களைவிட நன்றாகப் புரிந்து கொள்ளும் ஒரே நபர் என்றெல்லாம் பாராட்டித்தள்ளுவது.
உங்களை வயதானவர்போல நடத்தி, தான் ஒரு குழந்தையைப்போல நடந்து கொள்வது.
உங்களுக்குச் சிறப்புச் சலுகைகளையும் உரிமைகளையும் அளித்து, அவருக்கு நீங்கள் கடன்பட்டிருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துவது.
உங்கள் வயதுடைய குழந்தைகளுடன் விளையாடவோ, அவர்களைப்போல நடக்கவோவிடாமல் உங்களைத் தடுப்பது!
பாதுகாப்புக்குச் சில யோசனைகள்...
'மாணவிகளைச் சீண்டக்கூடியவர்!' என்று பெயரெடுத்த ஆசிரியர்களைச் சந்திக்கச் செல்லும்போது தனியாகச் செல்வதைத் தவிருங்கள்.
நீங்கள் எப்படிப் பழகுகிறீர்களோ, அதே எதிர்வினைதான் உங்களுக்கும். 'ஆசிரியரிடம் நல்ல பேர் எடுப்பது நல்லதுதானே!' என்று மிகவும் ஸ்பேஸ் கொடுத்துப் பழக வேண்டாம்.
உங்களின் பயத்தை வெளிக்காட்டிக் கொண்டால், அதுவே 'செக்ஸ் டார்ச்சர்' பேர்வழிகளுக்கு வசதியாகிவிடும். ஆகவே,
துணிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.
கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுவைத்திருப்பதுகூடச் சமயங்களில் உதவும்.
மிகவும் 'எக்ஸ்போஸிவ்' ஆக உடை அணிவதைத் தயவுசெய்து தவிர்க்கலாம் தோழியரே!
நன்றி : ஆனந்த விகடன்
Colleges in Tamilnadu
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment