Pages

Showing posts with label மழையின் ஸ்பரிசம். Show all posts
Showing posts with label மழையின் ஸ்பரிசம். Show all posts

மழையின் ஸ்பரிசம்




தெறித்து விழுந்த ஒற்றை
மழைத்துழி
உன் முன் நெற்றி வியர்வையை
முன் நிறுத்திச் செல்ல

தூரத்தில் தெரியும் சிறு வெளிச்சம்
இன்னும் மங்கையில்
நீ துவர்த்திய பூந்துவாலை
நெருடல்

வந்து என்னுள் உட்புகும் குளிரும்
நரம்பு மீட்டும் உன் நினைவும்
மனவெளி தெறித்து விழ

ஓடிப் போய் நான் நனையும்
மழைக்கும் என்னை
திட்டும் சுற்றத்துக்கும்
எப்படி தெரியும்

மழையின் ஸ்பரிசம்
உன் நினைவை
என்னுள் விதைத்து செல்வதை

Related Posts Plugin for WordPress, Blogger...