Pages

Showing posts with label தொலைத்து. Show all posts
Showing posts with label தொலைத்து. Show all posts

இன்பமான வலி

இதழ் தொட்டு நீ தந்த
ஒற்றை முத்தமெந்தன்
உயிர் தொட்டு உன்
மணம் சொல்லிச் செல்ல!

உனக்கெப்படித் தெரியும்
என் மணம் இன்னுமொன்றை
கேட்கின்றதென!

தொலைத்து விட்ட இதயத்தினை
நீ தூக்கிச் சென்றதாய்
நான் நினைக்க!

நீ வரும் நேரமெல்லாம்
அது துடித்து சொல்கிறது
இன்னும் என்னுள் இருப்பதையும்
உன் வருகையில் அது துடிப்பதையும்!

வந்து ஒற்றை நொடியில் நீ
தந்து சென்ற பார்வையும்
அருகாமை ஸ்பரிசமும்
உன் விழிமுனைக் கீறலும்!

இயன்றதெனினும்
நின் அருகாமையில் நான்
இயலாமலிருப்பதேன்னவோ
ஒரு இன்பமான வலியும்
துன்பமான சுகமும்

Related Posts Plugin for WordPress, Blogger...