Pages

Showing posts with label நிச்சயம். Show all posts
Showing posts with label நிச்சயம். Show all posts

உன்னுடன் நிச்சயம்


உன்னுடன் நிச்சயம் என
அம்மா என்னிடம் சொல்ல
நானில்ல என்னிடம்

வீதி நிறைந்த மங்கையரெல்லாம்
உன் முகம் தெளித்து சென்று
என் உயிரை உரைத்தது உண்மை

எப்படி என்னுள் நீ வந்தாய்
அந்நொடி தேடி திரிகையில்

வானம் முழுவதும்
வாழ்த்துக் சொல்லிச்செல்ல
உலகம் ஒரு புதிய தொடக்கமாய் என் முன்னில்

இணையப் போகும் ஓர் உயிரின்
வரவை எதிர்பார்த்து

ஆயிரத்திலும் ஒன்று கூடித்தான்
என் ஈன முனகல்
நாளை என்
நிச்சயம் என
அம்மா என்னிடம் சொல்ல சொல்ல !

நிச்சயமாய் என் உயிர்
ஆடி அடங்கியது
உண்மை .

சொல்லியோ எழுதியோ செல்
நீ எப்படி இருந்தாய் என்றும்
என்னுள் நுழைந்தாய் என்றும்


Related Posts Plugin for WordPress, Blogger...