Pages

என்னை தோற்கடி




உன் அம்மாவின் வழி தொடங்கியது
நம் முதல் காதல்.

மறைவாய் தொடங்கி - பின்
மௌனமாய் பேசி
நெடுந்தொலை நீடித்து - ஒரு
மௌனத்தின் பின் முடிக்க நினைத்து
தொடரும் போது - ஒரு
சத்திய பிரணாமம்
நான் உன்னை காதலிக்கிறேனென ..

எனக்கும் தெரியும் நீ என்னை
கோபபடவைக்க பாடாய்ப்படுவது
என்ன செய்ய - என்னிடம்
ஜெயிக்க நினைத்து
நீ தோற்பதற்கு பகரமாய்.

உனக்கும் தெரியும் - நான்
சந்திக்க போகும் உன் இதழும்
ஈர்ப்பு விசையும் என்னிடம்
தோற்க்கப்போவது
அதன் பகரமென.

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...