Pages

"அச்சம் என்பது மடமையடா": மன்னாதி மன்னன்


அச்சம் என்பது மடமையடா பாடல் பற்றிய சிறு தகவல்:

திரைப்படத்தின் பெயர்: மன்னாதி மன்னன்

வெளியிடடப்பட்டவருடம்: 1960

வெளியிட்டவர்கள் : நடேஷ் ஆர்ட்ஸ் பிச்சர்ஸ்

இயக்கியவர்: கே.சோமு

நடிகர்கள்: எம்.ஜி.ஆர்,பத்மினி,அஞ்சலி தேவி,பி.எஸ் வீரப்பா

இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

அச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்:

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

இப்பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்,

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...