Pages

Showing posts with label உன் வாசம். Show all posts
Showing posts with label உன் வாசம். Show all posts

வீழ்ந்து கிடந்த ஒரு நொடித் தூக்கத்தின் முடிவில்

வீழ்ந்து கிடந்த ஒரு நொடித்
தூக்கத்தின் முடிவில்...

கை கோர்த்து எழ நீயின்றி
தடுமாறி வீழ்கையில்
தெரிந்ததுன் பிரிவு.

ஒற்றை கண் மூடிதிறக்கையில்
ஒளிந்து கிடந்த உன் நினைவு
உறைந்த போன என்னுயிரை
உரசிப் பார்த்திட

புரண்டு படுத்து உருளுகையில்
உன் வாசம் நிறைந்த
தலையணை ஓரம்
உன்னினைவை என்னுள் விதைக்கிறது

உன் தவறில்லை




திணறி விழுந்த கடைசி
மழைத் துளி
தூவிச் சென்ற
உன்னருகாமை கதகதப்பு

நீ விட்டுச் சென்ற
ஊடல் பிரளயத்தில்
அடங்கி நிற்குமென்
வலி ததும்பும்
மனக் குவியல்

தூரத்துக் கொடியில்
உலரும் உன் உடை
வீசும் உன் வாசம்

நீ இல்லையென்ற இந்நொடி
உன் பிரிவை விதைத்து செல்ல

எப்படி சொல்லிட
உன் தவறில்லையென
நீ எளிதாய் சொல்வதையும்

உன் தவற்றை காட்டி
என்னை முத்தத்தால்
கொல்வதையும்.
Related Posts Plugin for WordPress, Blogger...