Pages

தோற்றுத்தான் போகிறேன்





அருகாமையின் ஸ்பரிசம்
வார்த்தைகளின் ஆழம்
நிரம்பி ததும்பும் உன்
நினைவுகளின் தேடல் .

ஒரு நொடியிலான உன்
விழியதின் ஈர்ப்பு - பின்
விழி மூடியும் என்னுள்.

உயிரும் நினைவும் தொலைத்து
உன் நினைவிலிருந்து மீள
நான் முயலும் - கணமெல்லாம்
தோற்றுத்தான் போகிறேன்

1 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு நல்ல கவிதையை படித்த நிறைவு என்னுள்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...