Pages

Showing posts with label என்னளவு காதலி. Show all posts
Showing posts with label என்னளவு காதலி. Show all posts

கருவறையும் என்னிதயமும்

ஒன்றல்ல
என் தாய் சுமர்ந்த
வலி தாண்டி
உன்னினைவு சுமக்கும்
கருவறையும் என்னிதயமும்
எனக்குத் தெரியும்
நான் ஆணென்பதும்
என் தாய் பெண் என்பதும்.

பின்னெப்படி
கருவறையும்
காதலைச் சுமக்கும்
என் இதயக் கல்லறையும் ஒன்றாகும்.

மீறியும் அது ஒன்றெனில்
ஒன்றுதான்
என்னிதயம் கருவறை தாண்டியது.
ஏனெனில்
தாய் ஆணல்ல
நானும் பெண்ணல்ல!

பின்னிரவு தொடக்கத்தில்




பின்னிரவு தொடக்கத்தில்
என்னவளுன் நினைவு
தொடர்ந்த பிம்பமாய்

தொலைக்க துடித்த
என்னுயிர் - துடித்து
அடங்க மறுத்திட

எப்படி உறங்கிட
நிரம்பி வழியும்
உன் நினைவுக் கோப்பையை
என் சபலக் கண்ணாடி
உடைக்க முயல்கையில்

வந்து பின் செல்லும்
உன் நி னைவனைத்தும்
என் உயிர் தொட்டு
ஜீவன் குழைத்து
நினைவு திருடி
என் உயிர் வலிக்க
உன்னை என்னுள்
விதைத்து செல்கையில்

இன்னும் என்னவளே
பின்னிரவு தொடக்கத்தில்
என்னவளுன் நினைவு

என்னளவு காதலி



என்னளவு காதலி
பின் புரியுமுனக்கு
நான் எப்படி உன்னைக்
காதலிக்கிறேனென ...

சத்தமிட்டு,சண்டையிட்டு
கேள்விக் க‌ணை தொடுத்து
அழவைத்து,தாலாட்டி
பின் ஓய்ந்த ...

அந்த மணித் துளி
தொடர்களின்
முடிவு தெரிந்தும்
என்னால் இய‌லவில்லை
உன்னிடம் பேசாம‌லிருக்க‌.
Related Posts Plugin for WordPress, Blogger...