Pages

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே |

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே

தென்றலைத் தூதுவிட்டு
ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு
இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தின் வந்தக் கனவிதுவே
என்னை இழுக்குது அந்த நினைவதுவே
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே

நீலக் கருங்குயிலே தென்னஞ்சோலைக் குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழி எங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா |

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா முத்து பல்லக்கா
அது என்னமோ என்னமோ ஹோய்
(செவ்வந்தி..)

கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு அத நீயும் காட்டு
அது சிரிப்பது தெரியாதா பூஜை உன் கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு இனி எனக்கது புரியாதா
கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே வளைப்பேன்
சிரிக்காதே நாடு பொறுக்காதே
என் மனசே கெடுதே குயிலே மயிலே ஹோய்
(செவ்வந்தி..)

ஆத்துல காத்தடிச்சா அலை மோது கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா
ஆயிரம் நினப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு அது துணிஞ்சிருக்கு எதுக்காக
உடம்பு இப்போ நடுங்குதம்மா
சலங்கையைப்போல் குலுங்குதம்மா
நீ பலசாலி நல்ல அறிவாளி
எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே ஹோய்
(செவ்வந்தி..)

சோளம் வெதக்கையிலே | 16 வயதினிலே |

சோளம் வெதக்கையிலே...
சொல்லி புட்டு பொன புல்லே
சோலம் வெதக்கையிலே...
சொல்லி புட்டு பொன புல்லே
சோலம் வெலஞ்சு காத்து கிடக்கு
சோடிக்கிலி இங்கே இருக்கு...
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி

மானே என் மல்லிகையே மருதை மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே திருனாலு தேரழகே
உன்ன நெனக்கையிலே என்ன மரந்தேனடி
பொன்னே பொன்ன்மயிலே என்னம் தவிக்குதடி
சோலம் வெதக்கையிலே...
சொல்லி புட்டு பொன புல்லே
சோலம் வெலஞ்சு காத்து கிடக்கு
சோடிக்கிலி இங்கே இருக்கு...
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி

மாரியம்மன் கொயிலிலே மாராம கைபிடிக்க
நாலும் ஒன்னு பாத்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்த அருல் வந்து சேருமடி
கன்னே கருங்க்குயிலே நல்ல காலம் பொரந்தடி

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு | 16 வயதினிலே |


ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

கோழிக்குஞ்சு வந்ததுன்னு

யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு

பூனைக்குஞ்சு சொன்னதுண்டு

கதையிலதானே

இப்போ காணுது பூமி

இது மட்டும்தானா

இன்னும் இருக்குது சாமி


கூத்து மேடை ராஜாவுக்கு

நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்

நூற்றிரெண்டு பெண்டாட்டியும்

வாத்து முட்டை போட்டதுவாம்

பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு

பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு

மொத்தம் இருபத்து ஆறு

சின்ன குட்டிகளின் மேல் ஆணை

புது சட்டிகளின் மேல் ஆணை

இரு வள்ளுவனின் ஏட்டிலுண்டு

பரம்பரை பாட்டிலுண்டு

கதையல்ல மகராசி


காக்கையில்லா சீமையிலே

காட்டெறுமை மேய்க்கையிலே

பாட்டெடுத்து பாடிப்புட்டு

நோட்டமிட்ட சின்னப் பொண்ணு

சந்தைக்கு போனா

நானும் சாட்சிக்கு வரவா

சம்பந்தம் பண்ணா

உனக்கு சம்மதம் தானா

காக்கையில்லா சீமையே ஏ…


காக்கையில்லா சீமையிலே

காட்டெறுமை மேய்க்கையிலே

காக்க வச்சி நேரம் பாத்து

பாக்க வச்ச ஆசை மச்சான்

சந்தைக்கு போறேன்

நீங்க சாட்சிக்கு வாங்க

சம்பந்தம் பண்ண

எனக்கு சம்மதம் தாங்க

அட இந்த பக்கம் பாருங்களே

என் கன்னி மொழி கேளுங்களே

அட ஏண்டி இங்க வந்திலுனு

கேக்குறீயா கேக்குறீயா

பழைய நெனப்புடா பேராண்டி

பழைய நெனப்புடா


கிட்டப்பாவின் பாட்டை கேட்டேன்

சின்னப்பாவை நேரில் பார்த்தேன்

கொட்ட கொட்ட வருகுதம்மா

சங்கீதமா பெருகுதம்மா

மேடைக்கு போனா எனக்கு ஈடில்ல பொண்ணு

பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு

என் திறமையை காட்டட்டுமா

To know more about 16 வயதினிலே go to that link.

http://www.ziddu.com/download/11873586/AatukuttiMuttaittu.mp3.html

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் - பாஸ் (எ) பாஸ்கரன்


யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள்
நெஞ்சை கிளிக்குறாள் ஒ..
கூட்டத்தில் இருத்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள்
என்னை எதோ செய்தாள்...

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ஒ..

என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்பேன்
கண்ணாடி வழயலை போல கையேடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால் கட்டும் கொளுசில் என்னோட மனசை சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன், கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை எதோ செய்தாள்...

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

நான் கொஞ்சம் பார்த்தால், எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
எனை பார்த்து சிரிப்பாள், நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம் புதியதை போல எப்போதும் யாரும் அறிந்த்ததேயில்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும், அன்றாடம் தவிப்பும் பெண்கள் மதிப்பதேயில்லை
மனம் நொந்த பிறகே, முதல் வார்த்தை சொல்வாள்,
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை எதோ செய்தாள்...

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள்
நெஞ்சை கிளிக்குறாள் ஒ..
கூட்டத்தில் இருத்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள்
என்னை எதோ செய்தாள்..

இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.


யார் இந்த பெண் தான் என்று கேட்டேன்:

"கிளிமாஞ்சாரோ மலைக் கனிமாஞ்சாரோ": எந்திரன்

கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டியப் புடிய்யா
சுக்குமிள்கு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடிய்யா

ஏவாளுக்குத்
தங்கச்சியே யெங்கூடத்தான்
இருக்கா

ஆளுயற ஆலிவ்பழம்
அப்படியே எனக்கா?

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ...நீ

கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

கொடி பச்சையே
எலுமிச்சையே
உன்மேல் உன்மேல்
உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை
ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை!

இனிச்சக்கீரே
அடிச்சக்கரே
மனச ரெண்டா ஓஹோ
மடிச்சுக்கிரே

நான் ஊற வைத்தக்
கனி - என்னை மெல்ல
ஆற வைத்துக் கடி!

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் - நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு - ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்!

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ..நீ


கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி எனைவாசியே

நீ தோல்குத்தாத பலா - றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா

ஆங்..மரதேகம் நாம் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில்வாசம் நீ

நீ நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
யாரு நான்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சைப் பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

அக்கக்கோ - நான் கின்னிக்கோழி
அப்பப்போ - என்னெப்
பின்னிக்கோ நீ
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோ நீ

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ நீ

இப்பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

"அச்சம் என்பது மடமையடா": மன்னாதி மன்னன்


அச்சம் என்பது மடமையடா பாடல் பற்றிய சிறு தகவல்:

திரைப்படத்தின் பெயர்: மன்னாதி மன்னன்

வெளியிடடப்பட்டவருடம்: 1960

வெளியிட்டவர்கள் : நடேஷ் ஆர்ட்ஸ் பிச்சர்ஸ்

இயக்கியவர்: கே.சோமு

நடிகர்கள்: எம்.ஜி.ஆர்,பத்மினி,அஞ்சலி தேவி,பி.எஸ் வீரப்பா

இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

அச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்:

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

இப்பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்,

"பாஸ் என்கிற பாஸ்கரன்": ஐலே ஐலே ஐலே ஐலே

:
ஐலே ஐலே
ஐலே ஐலே
ஐலே ஐலே
ஐலே ஐலே

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே
அணலிருக்கு குளிருக்கு எல்லாமே உன்னாலே

ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டலிலே
இதழ் மொத்தம் ஈரமானது பாரமனது போலே
ஏதோ ஓர் மோகம் இது எனக்கா தரும் தாகம்

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே

அந்நாளில் ஆப்பிள் தின்றதடி ஏவாள் முத்தம்
பின்னாளில் நாங்கள் வம்சத்திலே அதனால் யுத்தம்
எந்நாளும் கேட்டும் நிறுத்தாமல் முத்த சத்தம்
முத்தங்கள் மோதிக் கொண்டால்தான் உலகம் சுத்தம்
நம் ஆதியும் அண்டமும் முத்தமே முத்தமே
முத்தம் தா முத்தம் தா கண்மணி ஓ
யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே
முத்தத்தால் மேகம் அது மின்சாரமே

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே

அன்பென்ற வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்
ஆகாயம் தாண்ட சொல்லுதடி காதல் முத்தம்
அதனால்தான் நெஞ்சம் கேட்குதடி வெற்றிச் சத்தம்
என் வாழ்க்கையே மாற்றுதே முத்தமே முத்தமே
முத்தம்தா முத்தம் தா கண்மணி ஓ
காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே
உன் முத்தத்தால் அந்த மேகம் ஒரு மின்சாரம் ஆகும்

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே
அணலிருக்கு குளிருக்கு எல்லாமே உன்னாலே
ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டலிலே
இதழ் மொத்தம் ஈரமானது பாரமனது போலே
ஏதோ ஓர் மோகம் இது எனக்கா தரும் தாகம்

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே

ஐலே ஐலே
ஐலே ஐலே


பாஸ் என்கிற பாஸ்கரன் விமர்சனம்
:

"Review of Boss Engira Baaskaran- Tamil Move"

Watch the HD Video of Boss Engira Baaskaran Trailer:

என்னிதய தேவதை


என் காதலை உன் மேல் தூவி
நம்ப வைத்திட
எனக்கொரு இதயமில்லை
ஏனெனில்
எனக்கடுத்த ஒரு தேவதை
நீயாய் வீற்றிருக்க
என்ன சொல்ல
என் இதய தேவதையிடத்து

ஒரு மூச்சு துளியில்
சிறு இதயத் திணறலில்
திறந்த அம்மன தூரலில்
நானே நானாய் தொலைந்த
உன் சிறு சிரிப்புக் குழியில்
என் காதலை உன் மேல் தூவி
நம்ப வைத்திட
எனக்கொரு இதயமில்லை.

ஒரேயொரு வார்த்தை மட்டுமே
என்னிடம்
ஆயுள் முழுதும்
என்னிதய தேவதையாய் நீ.

உன்னிடம் ஒரே ஒரு கேள்வி தமிழச்சி

நியண்டர்தாலின் வழி தோன்றிய நீ
இன்று ஏன் உடை அணிகிறாய்

உடை இன்றி உணவின்றி உன்
முன்னோர் போல திரிந்தாலென்ன

நீ ஒரு குழிகொண்டு பேச
எனக்கொன்றும் குறியில்லை

எந்த மதமும் ஒரு விலங்கிடவில்லையெனில்
உனக்கெதற்கு உடை விலங்கு

உன் தந்தை உன்னை ஆக்கிரமிக்கவில்லையெனில்
நீ உன் உள்வீட்டில் உடை இன்றித் திரி
உன் சமூகமும்
உன்னை அங்ஙனம் நோக்கினால்
வீட்டிலென்ன தெருவில் கூட
நீ நியாண்டர்தாலாய்
திரியலாம்.

நீ ஒன்றும் ஆக்கிரமிக்கப்படவில்லை
உன் தந்தையொரு மதம் சார்ந்தவருமில்லை
அதுதானே நின் ஆண் உறவுகளுக்கும்.
என்றால்
திரிந்து காட்டு ஒரு
நியாண்டர்தாலாய்.

உனைக் கண்ட ஒவ்வொரு ஆணும்
கண்ணால் உனைக் கற்பழிப்பது
இல்லையெனில் நீ என்ன கண்ணகியா
இல்லை ?
உன் சார்ந்த ஆண்களென்ன கோவலர்களா..

பார்வைக்குத்தான்
பர்தா என்பதில்லை
உன் சமூகம் சார்ந்த காமக் கண்களுக்கதான்
அது இசுலாமும் இந்துத்துவமும்
இல்லை கிருத்துவமும்
அவரவர் கொண்டது

எந்த மாதமெனினும் ஒரு ஒழுக்கம்
அதுதானே வாழ்வியல்

உன் மாத நேரத்தில்
நீ உறவு கொள்வாயெனில்
உனக்குள்ளது குழியல்ல
அது போலதான்
என் குறியும்
நீ சொன்ன மாதமும்.

நியண்டர்தாலகி
உன் சமூகம் கண்டு.

கற்பழிப்பு தாண்டிய உன்
ஆண்வர்க்கம் தாண்டி .

உணர்ச்சியற்ற உன் குழி மூடி
விடை சொல் என்னிடம்

நீயும் நின் சார்ந்த
சமூகமும்
எப்படி
உடை கண்டு , நடை கொண்டு
நடப்பீர்களென

உன்னிடம் ஒரே ஒரு கேள்வி தமிழச்சி -
நியண்டர்தாலின் வழி தோன்றிய நீ
இன்று ஏன் உடை அணிகிறாய்

இக்கவிதை கீழ்க்கண்ட கேள்விக்குறியிட்ட ஒரு மனிதப் போர்வையிலுள்ள மகா மட்டமான ஆனதிக்கமற உலகில் அம்மணமாய் அலைந்து திரியும் ஒரு நவீன மனித நேயம் பேசும் தேவச்சியின் பதிலுக்காய் எழுதப்பட்டது

[சிறுகுறிப்பு: பிரான்ஸ் நாட்டில் பர்தா அணிவது தடை செய்யப்பட்ட சட்டமாக அறிவிக்கப்பட்டதை முன்வைத்து தற்போது தமிழக இலக்கியத்தில் சில விவாதங்கள் நடைபெறுகின்றன. தோழர் குமரேசன் அசாக் ‘பெண்ணே நீ’ பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையை முன்வைத்து திருமதி. ஜெஸிலா பர்தாவுக்கு ஆதரவாக ஓர் கவிதையை பதிலாக கூறியிருந்தார். அக்கவிதைக்கு எதிர்விணையாக இக் கேள்வி எழுப்பப்படுகிறது]

நன்றி : திருமதி. ஜெஸிலா




கருவறையும் என்னிதயமும்

ஒன்றல்ல
என் தாய் சுமர்ந்த
வலி தாண்டி
உன்னினைவு சுமக்கும்
கருவறையும் என்னிதயமும்
எனக்குத் தெரியும்
நான் ஆணென்பதும்
என் தாய் பெண் என்பதும்.

பின்னெப்படி
கருவறையும்
காதலைச் சுமக்கும்
என் இதயக் கல்லறையும் ஒன்றாகும்.

மீறியும் அது ஒன்றெனில்
ஒன்றுதான்
என்னிதயம் கருவறை தாண்டியது.
ஏனெனில்
தாய் ஆணல்ல
நானும் பெண்ணல்ல!

நின்னை சரணடைந்து



நின்னை சரணடைந்து
உனையே உலகாய் நினைத்து
வழி தொடர்ந்து
நடை நடந்து
நின் கேள்விக்கணைகளில்
நிலை குலைந்து
வீழ்ந்த நேரத்தில் நீ வர
புரிந்ததெனக்கு
அழகும் நீயும்
இன்ப அவஸ்தையென்று.

காதல் கடினமெனில்
அதை விடக் கடினமுன்
கண்ணீர்ப்பு மௌனங்கள்
பின்னிடும் பிரளயங்கள்.

உண்மைதான்?
அன்பும் அவஸ்தையும்
காதலுக்கான அடையாளமென்பது.

உள்ளதென அறியாமல்

இருந்த ஒரு உயிர் உன் ஒற்றைக்
கேள்வியில் உடைந்து சில்லாக
பிறக்கும் முன்பே
இறந்த குழந்தையாய்
நான் .

கூடி நின்ற கண்ணீர்
கண்ணைக் கல்லறையாக்க
ஒரு துளி மின்சாரக் கனவுடன்
என் இன்றைய பொழுது

வழக்கம் போலத்தான்
உன் ஒற்றைக் கேள்வி
மனதையும் மானத்தையும்
புரட்டிபோட

தீய்ந்த மனம் இன்னும்
உன்னைத் தொடர்ந்து
என்னவெல்லாம் உள்ளதென
இன்னும் அறியாமல்.

Related Posts Plugin for WordPress, Blogger...